அண்ணன்


பெய‌ர்:
சுந்த‌ர‌வ‌த‌ன‌ம்


ப‌டித்த‌து:
இள‌ங்க‌லை வேதியிய‌ல்

ப‌ணி புரிந்த‌து :
இந்திய இராணுவ‌ப் ப‌டை
உத‌வி பொரியாளார்

ப‌யிற்சி பெற்ற‌து :
ம‌த‌ராசு பொரியிய‌ல் குழும‌ம் ம‌ங்களுர்

சாத‌ணை:
ப‌த்தாம் வ‌குப்பில் ப‌ள்ளி முத‌லிட‌ம்

ப‌யிற்சியில் சிற‌ந்த‌ ப‌டாளிய‌ன் விருது
 
 
 
 
அண்ணன்
சில காலம் தெரியாது

எங்களை பிரியாது
மேலும் புரியாது இருந்தவன்

அன்பினை அள்ளித் தந்து
அறிவினை அளவிடா பெருக்கினான்

உறவுகளின் உன்னதம் போற்றி
உண்மையின் விளிம்பில் நின்றான்

குடும்பம் குலையாமல் இருந்து
குலவிளக்காய் குடி நாடினான்

இந்திய குடிமகனாய்
என் நாடு காத்தான்

போர் புரிய உதவினான்
புலம் பெயர கட்டினான்

ஆற்றினை கடந்திட
கரை கட்டினான் (கட்டினார்கள்)

கண் பட்டதோ
களவு கொண்டதோ

அடித்து சென்றானாம் ஆற்றில்
கிடைக்க வில்லையாம் கரும உடல்

மண்ணில் இருந்து மறைந்து
விண்ணில் சேர்ந்து

எங்களின் மனதில்
மாற இடம் பிடித்தாய்

குழந்தை பருவம் போற்றினோம்
உடன் குளிர் காய கூடினோம்

அழுதோம்
ஆர்பரித்தோம்

சண்டையிட்டோம்
சாகாவரம் பெற்றோமா?

திண்ணம் கொண்டோம்
தெளிவு பெற்றோம்

இன்னும் தேடுகிறோம்
எங்களுள் இருந்து மறையாமல்

தொலைந்து போனாய?
மறைந்து போனாய?

காத்திருக்கிறோம் அண்ணா
உன் வருகைக்கு

மனிதனாய்
மறுபிறவியாய்

கண்களில் நீர் கொண்டு
கருத்தினில் உன்னை கொண்டு

நிலையினில் நீயாய்
எங்களின் நிலைகளில் நீயாய்

உனக்கே சமர்ப்பணம்
உனக்கே சமர்ப்பணம்

நாங்கள் வளர்வதும் உன்னால்
வாழ்வதும் உன்னால்

உனக்கே
உன் பெயருக்கே

எமது தளம் தகுதி திறன்
அனைத்தும் உனக்கே சமர்ப்பணம்